5 வயது அடையும் முன் 9ல் ஒரு பெண் குழந்தை மரணம்; கவலை கொள்ளாத அரசு என ஒவைசி குற்றச்சாட்டு

இந்தியாவில் 5 வயது அடையும் முன் 9ல் ஒரு பெண் குழந்தை மரணம் அடைவது பற்றி அரசு கவலை கொள்ளவில்லை என ஒவைசி குற்றச்சாட்டு தெரிவித்து உள்ளார்.
5 வயது அடையும் முன் 9ல் ஒரு பெண் குழந்தை மரணம்; கவலை கொள்ளாத அரசு என ஒவைசி குற்றச்சாட்டு
Published on

ஐதராபாத்,

ஏ.ஐ.எம்.ஐ.எம். தலைவர் அசாதுதீன் ஒவைசி நிகழ்ச்சி ஒன்றில் பேசும்போது, ஆப்கானிஸ்தான் நாட்டை தலீபான்கள் கைப்பற்றி இருப்பது, பாகிஸ்தான் நாட்டுக்கே அதிக பயன் அளிக்க கூடியது.

ஆப்கானிஸ்தானின் சில பகுதிகளுக்குள் அல் கொய்தா மற்றும் டேயீஷ் பயங்கரவாத அமைப்பினர் நுழைந்துள்ளனர் என நிபுணர்கள் கூறி வருகின்றனர். ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு ஆனது இந்தியாவின் எதிரி.

அந்த அமைப்பு தலீபான்களை கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளது. அவர்களை ஊதுகோலாக பயன்படுத்தி வருகிறது என்பதனையும் நினைவில் கொள்ள வேண்டும் என அவர் எச்சரிக்கை செய்யும் வகையில் பேசியுள்ளார்.

இந்தியாவில் 5 வயது அடையும் முன் 9ல் ஒரு பெண் குழந்தை மரணம் அடைகிறது என அறிக்கை ஒன்று தெரிவிக்கின்றது. நாட்டில் பெண்களுக்கு எதிராக வன்முறைகளும், குற்ற சம்பவங்களும் நடந்து வருகின்றன.

ஆனால், அவர்கள் (மத்திய அரசு) ஆப்கானிஸ்தான் நாட்டில் என்ன நடந்து கொண்டிருக்கிறது என்பது பற்றி கவலை கொண்டிருக்கின்றனர். அதுபோன்று இங்கு நடைபெறவில்லையா? என்றும் ஒவைசி கேள்வி எழுப்பியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com