ஒருதலை காதல் விவகாரம்: வாலிபர் தற்கொலை

ஒருதலை காதல் விவகாரத்தில் வாலிபர் தற்கொலை செய்துகொண்டார்.
ஒருதலை காதல் விவகாரம்: வாலிபர் தற்கொலை
Published on

பெங்களூரு: கர்நாடக மாநிலம் கலபுரகி மாவட்டம் ஆலந்தா தாலுகா பெஜரவர்கி கிராமத்தை சேர்ந்தவர் ராமசந்திரா (வயது 23). இவர் கலபுரகி டவுன் சிவாஜிநகர் பகுதியில் தங்கி உணவு விற்பனை பிரதிநிதியாக வேலை பார்த்து வந்தார். இந்த நிலையில் ராமசந்திரா அந்தப்பகுதியை சேர்ந்த பெண்ணை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.

தனது காதலை அந்த பெண்ணிடம் ராமசந்திரா தெரிவித்துள்ளார். ஆனால் அதற்கு இளம்பெண் மறுத்ததாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த ராமசந்திரா, தான் தங்கியிருந்த வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுகுறித்து எம்.பி. போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com