பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் உயிரிழப்பு

பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி நடத்திய தாக்குதலில் இந்திய வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.
பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறி தாக்குதல்; இந்திய வீரர் உயிரிழப்பு
Published on

ஜம்மு,

இந்தியா மற்றும் பாகிஸ்தான் நாடுகள் இடையே போர்நிறுத்த ஒப்பந்த விதிகள் அமலில் இருந்து வருகின்றன. காஷ்மீர் பகுதியில் பாகிஸ்தான் ராணுவ தரப்பில் இருந்து அவ்வப்பொழுது அத்துமீறிய தாக்குதல் நடத்தப்பட்டு வருகிறது. இதற்கு இந்திய தரப்பில் பதிலடியும் கொடுக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், ஜம்மு மற்றும் காஷ்மீரின் உரி பிரிவில் அமைந்த எல்லை கட்டுப்பாட்டு கோடு பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் போர்நிறுத்த ஒப்பந்த விதிகளை மீறி இன்று தாக்குதலில் ஈடுபட்டது.

இந்த தாக்குதலில் இந்திய ராணுவ வீரர் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com