அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்வு

அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்ந்துள்ளது.
அரசியல் கட்சிகளின் ஆன்-லைன் விளம்பர செலவு இரு மடங்காக உயர்வு
Published on

புதுடெல்லி,

தற்போதைய நாடாளுமன்ற தேர்தலில், அரசியல் கட்சிகளின் ஒட்டுமொத்த விளம்பர செலவு ரூ.2,500 கோடியில் இருந்து ரூ.3 ஆயிரம் கோடிவரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இதில், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட ஆன்-லைன் தளங்களில் செய்யப்படும் விளம்பர செலவு மட்டும் ரூ.500 கோடியாக இருக்கும் என்று கணிக்கப்படுகிறது. இது, கடந்த தேர்தலில் ஏற்பட்ட ஆன்-லைன் விளம்பர செலவை விட இருமடங்கு அதிகம் ஆகும்.

ஸ்மார்ட் போன் பயன்பாடு அதிகரித்ததும், இணையதள கட்டணங்கள் மலிவாகி விட்டதும்தான் இதற்கு காரணம் என நிபுணர்கள் தெரிவித்தனர். ஆன்-லைன் விளம்பர செலவுகளில் பா.ஜனதா முதலிடத்தில் உள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com