4½ கோடி சிறு வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் ; நாடாளுமன்றத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி. பேச்சு

நாடாளுமன்ற மக்களவையில் நேற்று கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி. எச்.வசந்தகுமார் பேசியதாவது:-
4½ கோடி சிறு வணிகர்களை பாதிக்கும் ஆன்லைன் விற்பனையை தடை செய்ய வேண்டும் ; நாடாளுமன்றத்தில் எச்.வசந்தகுமார் எம்.பி. பேச்சு
Published on

புதுடெல்லி,

ஆன்லைன் வர்த்தகத்தை அறிமுகப்படுத்திய பின்னர் சிறு வணிகர்கள் மற்றும் உள்ளூர் கடைக்காரர்களின் வணிகம் பெரிதும் சரிந்தது. 4 கோடி கடைக்காரர்கள் மற்றும் சிறு வணிகர்கள் தங்கள் கடைகளை மூட வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டிருக்கிறார்கள். தவிர, இது ஒரு கோடிக்கும் அதிகமானவர்களுக்கு வேலையின்மையை உருவாக்கியுள்ளது.

இந்த ஆண்டில், வால்மார்ட் நிறுவனத்துக்கு சொந்தமான பிளிப்கார்ட் கம்பெனியினால் ஏற்பட்ட இழப்பு ரூ.3,835 கோடி என்றும், அமேசான் நிறுவனத்தால் அறிவித்தபடி ரூ.6 ஆயிரம் கோடி என்றும் உங்கள் கவனத்துக்கு கொண்டுவர விரும்புகிறேன். இந்த ஆன்லைன் வணிகத்தில் இருந்து அரசாங்கத்துக்கு எந்த வருமானமும் இல்லை, இளைஞர்களுக்கு வேலை பாதுகாப்பும் இல்லை.

எனவே 4 கோடி சிறு வணிகர்கள் மற்றும் கடைக்காரர்களின் நலனை பாதுகாக்க உடனடியாக ஆன்லைன் வணிகத்தை தடை செய்யுமாறு கேட்டுக்கொள் கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com