இன்னும் ரூ.6,017 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் திரும்பி வரவில்லையா..? - என்ன சொல்கிறது மத்திய அரசு

1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

ஒடிசாவின் பிஜூ ஜனதா தளம் கட்சி எம்.பி. பர்துருஹரி மெஹ்தாப், மக்களவையில் ரூ.2,000 நோட்டுகள் தொடர்பாக சில கேள்விகளை கேட்டிருந்தார்.

அதற்கு மத்திய நிதித்துறை இணை மந்திரி பங்கஜ் சவுத்ரி நேற்று எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டு இருப்பதாவது:-

2023-ம் ஆண்டு மே 19-ந்தேதி ரூ.2,000 நோட்டுகளை திரும்பப்பெற முடிவு செய்யப்பட்டது. ரிசர்வ் வங்கியின் தகவல்படி, 2023-ம் ஆண்டு மே 19-ந்தேதியன்று ரூ.3.56 லட்சம் கோடியாக இருந்த 2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு கடந்த ஜூலை 31-ந்தேதியன்று ரூ.6,017 கோடியாகக் குறைந்துள்ளது. அதாவது 1.69 சதவீதம் ரூ.2,000 நோட்டுகள் மட்டும் இன்னும் ரிசர்வ் வங்கிக்கு திரும்பவில்லை.

இவ்வாறு பதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com