தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சித்தராமய்யா மறுப்பு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு

தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட முடியாது என சித்தராமய்யா மறுப்பு தெரிவித்துள்ளதற்கு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
தமிழகத்திற்கு தண்ணீர் திறந்து விட சித்தராமய்யா மறுப்பு தமிழக விவசாயிகள் எதிர்ப்பு
Published on

பெங்களூர்

கர்நாடக முதல் மந்திரி சித்தராமய்யா கூறியதாவது:-

கர்நாடகாவில் போதிய மழை பெய்யாததால் தமிழகத்திற்கு தற்போதைக்கு தண்ணீர் திறந்து விட முடியாது .மழையின் அளவை பொறுத்தே தண்ணீர் திறந்து விட முடியும். கர்நாடக மக்களின் குடிநீர் தேவைக்காக மட்டுமே தற்போது தண்ணீர் திறந்துவிட முடியும் என கூறினார்.

தமிழகத்திற்கு தண்ணீர் இல்லை என கர்நாடகா கூறுவது கண்டனத்திற்குரியது என பி.ஆர்.பாண்டியன் தந்தி டிவிக்கு பேட்டி அளித்துள்ளார்.முதலமைச்சர் பழனிசாமி, பிரதமரை வலியுறுத்தி தண்ணீர் பெற்று தர வேண்டும் என கூறி உள்ளார்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com