

ஆமதாபாத்,
சர்தார் வல்லபாய் படேல் சிலையின் பெயர் பலகையில் ஸ்டேச்சு ஆப் யூனிட்டி என ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அதன் கீழே ஸ்டேச்சு ஆப் யூனிட்டி என்ற வார்த்தை பல்வேறு மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது.
ஆனால், தமிழில் ஒற்றுமை சிலை என்பதற்கு பதிலாக ஸ்டேட்டுக்கே ஒப்பி யூனிட்டி என தவறாக மொழி பெயர்க்கப்பட்டு இருந்தது.
இதுதொடர்பான புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. முதுபெரும் மொழிகளில் ஒன்றான தமிழை கொச்சைப்படுத்தி உள்ளதாக பலரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். அதே சமயம் சமூக வலைதளங்களில் நெட்டிசன்கள் இதை சுட்டிக்காட்டி கேலி செய்து வருகின்றனர்.