ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது ; ராணுவ தலைமை தளபதி

பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது.
ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது ; ராணுவ தலைமை தளபதி
Published on

போபால்,

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் பாகிஸ்தான் மீது ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை இந்தியா மேற்கொண்டது. பாகிஸ்தான், ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாத முகாம்களை பாதுகாப்புப்படையினர் அழித்தனர்.

இந்நிலையில், மத்தியபிரதேசம் ரிவா மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் ராணுவ தளபதி உபேந்திர திவேதி பங்கேற்றார். நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது,

ஆபரேஷன் சிந்தூர் கொள்கை, தொழில்நுட்ப வலிமையால் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஆபரேஷன் சிந்தூர் வெற்றிபெற்றது. பாகிஸ்தானில் அப்பாவி மக்கள் பாதிக்கப்படக்கூடாது என முடிவெடுத்தோம். பயங்கரவாதிகள் மற்றும் அவர்களின் தலைவர்களையே தாக்கினோம். பயங்கரவாதிகள் உள்ள இடங்களிலேயே தாக்குதல் நடத்தப்பட்டது. பாதுகாப்பு கட்டமைப்புகள், பொதுமக்களை குறிவைக்கவில்லை. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கத்தை சாதித்தோம். இதன் மூலம் பாகிஸ்தானுக்கு வலிமையான செய்தியை அனுப்பினோம்

என்றார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com