

பாரதீய ஜனதா கட்சியின் அகில இந்திய துணை தலைவர் மற்றும் மத்திய பிரதேச முன்னாள் முதல் மந்திரியான சிவராஜ் சிங் சவுகான் அக்கட்சியின் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் இன்று பேசினார்.
அவர் கூறும்பொழுது, எந்தவொரு கொள்கை, நோக்கம் அல்லது தலைவர் இல்லாதது எதிர்க்கட்சிகளின் கூட்டணி. பிரதமர் வேட்பாளர் ஒருவர் இல்லாமல் தேர்தலுக்காக எதிர்க்கட்சிகள் அமைத்துள்ள கூட்டணியானது, மணமகன் யாரென ஒருவருக்கும் தெரியாத திருமணத்திற்கு தயாராவது போன்றது என கூறியுள்ளார்.
அவர்களது கைகளே ஒன்று சேர்ந்துள்ளன. இதயங்கள் அல்ல. எதிர்க்கட்சி தலைவர்களின் விருப்பத்திற்கு இணங்கவே இந்த கூட்டணி உருவாகியுள்ளது. எந்தவொரு கருத்தியல் அடிப்படையிலும் இல்லை. வருகிற நாடாளுமன்ற தேர்தலில் பாரதீய ஜனதா கட்சி 300 தொகுதிகளை கைப்பற்றும் என்றும் அவர் கூறியுள்ளார்.