

மும்பை,
டி.ஆர்.பி. முறைகேடு வழக்கு தெடர்பாக, மும்பை பேலீசார் கூடுதல் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்துள்ளனர். இதில் ரிபப்ளிக் டி.வி. தலைமை ஆசிரியர் அர்னாப் கேஸ்வாமி மற்றும் பார்க் அமைப்பின் முதன்மை தலைமை செயல் அதிகாரி பார்த்தே தாஸ் குப்தா இடையே நடைபெற்ற வாட்ஸ் அப் உரையாடல் மூலம், 2019 நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறவே, பா.ஜ.க. பாலக்கேட் தாக்குதலை நடத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது.
இது தெடர்பாக விசாரணை நடத்த நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என தேசியவாத காங்கிரஸ் கட்சி கேரிக்கை விடுத்துள்ளது. மும்பையில் செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் செய்தித் தெடர்பாளர் மகேஷ் தாப்ஸி, நாட்டின் உச்சபட்ச ரகசிய தகவல் அர்னாப் கேஸ்வாமிக்கு கிடைத்தது எப்படி என விசாரணை நடத்துவதுடன், அத்தகையை நபர்கள் மீது உள்துறை அமைச்சகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி உள்ளார். அர்னாப் கேஸ்வாமி விவகாரத்தில் மேடி அரசு அமைதி காப்பது ஏன் எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.