நிர்பயாவின் தாயாருக்கு சவால் விட்ட எதிர்தரப்பு வக்கீல்

குற்றவாளிகளின் தூக்கு தண்டனை தொடர்பாக, நிர்பயாவின் தாயாருக்கு எதிர்தரப்பு வக்கீல் சவால் விடுத்தார்
நிர்பயாவின் தாயாருக்கு சவால் விட்ட எதிர்தரப்பு வக்கீல்
Published on

புதுடெல்லி,

நிர்பயா வழக்கு குற்றவாளிகளின் தூக்கு தண்டனை நிறுத்திவைக்கப்பட்டதற்கு காரணமானவர் குற்றவாளிகளின் வக்கீலான ஏ.பி.சிங். பிரபல கிரிமினல் வக்கீலான இவர், நிர்பயா இந்திய கலாசாரத்தை மீறியதாக முன்பு கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது.

அதேபோல குற்றவாளிகளை சுட்டுக்கொல்ல வேண்டும் என்று சில எம்.பி.க்கள் கூறியதற்கு, எம்.பி.க்கள் இப்படி கூறுவது அரசியல் அமைப்பை அவமதிக்கும் செயல். இந்த குற்றவாளிகளை தூக்கில் போட்டால் கற்பழிப்புகளே நின்றுவிடும் என்று உத்தரவாதம் தரமுடியுமா? என்று கேட்டு அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.

இந்நிலையில் நிர்பயாவின் தாயார் கோர்ட்டு வளாகத்தில் நிருபர்களிடம் கூறும்போது, வக்கீல் ஏ.பி.சிங் குற்றவாளிகள் ஒருபோதும் தூக்கிலிடப்படமாட்டார்கள் என்று எனக்கு சவால் விடுத்தார். ஆனால் குற்றவாளிகளை தூக்கிலிட நான் தொடர்ந்து போராடுவேன் என்று கண்ணீர் விட்டபடி தெரிவித்தார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com