நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்ததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் முன்கூட்டியே முடிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ராகுல் காந்தி மற்றும் பிற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் இன்று பேரணியாக சென்றனர்.
நாடாளுமன்ற கூட்டத்தொடர் முன்கூட்டியே முடித்ததை கண்டித்து எதிர்க்கட்சி எம்.பி.க்கள் பேரணி
Published on

புதுடெல்லி:

நடந்து முடிந்த நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் பெகாசஸ் உளவு விவகாரம், வேளாண் சட்டங்கள், பெட்ரோல், டீசல் விலை உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகளை எழுப்பி எதிர்க்கட்சிகள் தினமும் அமளியில் ஈடுபட்டன.

இதனால், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் முடங்கின. பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க வேண்டும், சுப்ரீம் கோர்ட்டு கண்காணிப்பில் விசாரணை நடத்தப்பட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின.

மத்திய அரசுக்கு நெருக்கடி கொடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் கைகோர்த்து ஒற்றுமையாக செயல்பட்டன. இதனால் மத்திய அரசு திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே மழைக்கால கூட்டத்தொடரை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர்கள் மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே அலுவலகத்தில் சந்தித்து ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் மத்திய அரசின் மூன்று விவசாயச் சட்டங்களை ரத்து செய்யக் கோரியும், நாடாளுமன்ற கூட்டத் தொடர் முன் கூட்டியே முடிக்கபட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் எதிர்க்கட்சித் தலைவர்கள் இன்று நாடாளுமன்றத்தில் இருந்து விஜய் சவுக் நோக்கி பேரணி சென்றனர். பேரணிக்கு ராகுல்காந்தி தலைமை தாங்கினார்.

பின்னர் ராகுல்காந்தி கூறும் போது எதிர்க்கட்சிகளை நாடாளுமன்றத்தில் பேச அனுமதிக்கப்படாததால் நாங்கள் இன்று உங்களுடன் (ஊடகங்கள்) பேச இங்கு வெளியே வர வேண்டியிருந்தது. இது ஜனநாயக படுகொலை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com