எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மணிப்பூர் பயணம் வெறும் நாடகம் - மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றச்சாட்டு

எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மணிப்பூர் பயணம் வெறும் நாடகம் என்று மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் குற்றம் சாட்டியுள்ளார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

கொல்கத்தா,

கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரின் நிலைமையை ஆய்வு செய்ய இந்தியா கூட்டணியில் உள்ள எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் 21 பேர் அந்த மாநிலத்துக்கு சென்றுள்ளனர்.

இந்த நிலையில் மேற்குவங்காள தலைநகர் கெல்கத்தாவில் பத்திரிகையாளர்களை சந்தித்த மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை மந்திரி அனுராக் தாக்கூர், எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மணிப்பூர் பயணத்தை கடுமையாக விமர்சித்தார்.

இது குறித்து அவர் கூறுகையில், "எதிர்க்கட்சி எம்.பி.க்களின் மணிப்பூர் பயணம் வெறும் நாடகம். தற்போது மணிப்பூருக்கு சென்று இருப்பவர்கள், முந்தைய அரசாங்கங்களில் மணிப்பூர் எரிந்தபோது நாடாளுமன்றத்தில் ஒரு வார்த்தை கூட பேசவில்லை" என குற்றம் சாட்டினார்.

தொடர்ந்து பேசிய அவர், "பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடக்கும் மேற்கு வங்கத்துக்கும் அதே குழுவை அழைத்து வர வேண்டும் என்று காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரிக்கு எனது வேண்டுகோளை வைக்கிறேன். கொலைகள் மூலம் ஆட்சியை பிடிக்கும் மம்தா பானர்ஜி அரசை காங்கிரஸ் எதிர்க்குமா? பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் ராஜஸ்தானுக்கு இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் சென்று அறிக்கை சமர்ப்பிப்பார்களா?" என கேள்வி எழுப்பினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com