

புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 28-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. கடந்த 1-ந் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. 2-ந் தேதியில் இருந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்று வருகிறது.
அந்த விவாதத்தை ஆக்கப்பூர்வமாக நடத்த விடாமல், பல்வேறு பிரச்சினைகளை எழுப்பி, காங்கிரஸ், திமுக, திரிணமுல் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சி எம்.பி.,க்கள் அமளியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனிடையே மக்களவையில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டும் என்று நாடாளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் முடக்கி வருகின்றனர். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக மக்களவை நாள் முழுவதும் ஒத்திவைக்கப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் அவையில் ராகுல் காந்தியை பேச அனுமதிக்க வேண்டுமென்று மக்களவையில் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தொடர்ந்து வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். ராகுல் காந்தியை பேச அனுமதிக்காத நிலையில் கடும் அமளி நீடித்ததால் நாளை காலை வரை மக்களவை ஒத்திவைக்கப்பட்டது.
நாடாளுமன்ற மக்களவை இன்றும் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தொடர் அமளியால் அடுத்தடுத்து 3 முறை ஒத்திவைக்கப்பட்டு பின்னர் 5-வது முறையாக நாள் முழுவதும் ஒத்தி வைக்கப்பட்டது.