

புதுடெல்லி,
மத்திய அரசின் மகளிர் இட ஒதுக்கீடு தொடர்பான மசோதா தோல்வி அடைந்ததை எதிர்க்கட்சி யினர் கொண்டாடி வருகிறார்கள். இதனை கண்டித்து மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா எக்ஸ் தளத்தில் பதிவிட்டு உள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
நாட்டின் பாதி மக்கள்தொகையான 70 கோடி பெண்களை ஏமாற்றி, அவர்களின் நம்பிக்கையை இழந்த பிறகு, ஒருவரால் எப்படி வெற்றியைக் கொண்டாட முடியும்?. எதிர்க்கட்சிகளின் இந்த கொண்டாட்டம். பல தசாப்தங்களாக தனது உரிமைகளுக்காக காத்திருக்கும் ஒவ்வொரு பெண் ணுக்கும் ஒரு அவமானம்.
காங்கிரசும், அதன் கூட்டணிக் கட்சிகளும் எத்தனை முறை பெண்களை காட்டிக் கொடுக்கும்? பல சமயங்களில், ஆணவத்தால் பிறக்கும் வெளித்தோற்ற வெற்றியின் மகிழ்ச்சி, உண்மையில், ஒரு மறைக்கப்பட்ட பெரும் தோல்வியாகும். இதை சிலரால் புரிந்துகொள்ள முடியவில்லை.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.