நாடாளுமன்ற இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளி

மகா கும்பமேளா கூட்ட நெரிசல் தொடர்பாக நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
புதுடெல்லி,
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த 31ம் தேதி ஜனாதிபதி உரையுடன் தொடங்கியது. இந்த நிலையில் 2025-26ம் நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் தாக்கல் செய்தார்.
இந்நிலையில், இன்று காலை 11 மணியளவில் நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் தொடங்கின. அப்போது உத்தரபிரதேசத்தில் உள்ள பிரயாக்ராஜ் மகா கும்பமேளாவில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 30 பேர் உயிரிழந்தனர். இந்த உயிரிழப்பு குறித்து விவாதிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் இரு அவைகளிலும் கோரிக்கை வைத்தனர். ஆனால் அனுமதி மறுக்கப்பட்டதையடுத்து அடுத்து இரு அவைகளிலும் எதிர்க்கட்சிகள் கடும் அமளியில் ஈடுபட்டன.
இதையடுத்து, மாநிலங்களவையில் இருந்து காங்கிரஸ், திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
Related Tags :
Next Story






