ஒப்புகைச்சீட்டு எண்ணும் விவகாரம்: தேர்தல் கமி‌ஷனில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் மனு

தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளை பொருட்படுத்தாமல், பா.ஜனதா அல்லாத அரசு அமைக்கும் முயற்சியில் எதிர்க்கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.
ஒப்புகைச்சீட்டு எண்ணும் விவகாரம்: தேர்தல் கமி‌ஷனில் எதிர்க்கட்சிகள் இன்று மீண்டும் மனு
Published on

புதுடெல்லி,

ஒப்புகைச்சீட்டுகளை எண்ணும் விவகாரத்தில், 50 சதவீத சீட்டுகளை எண்ண வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை சுப்ரீம் கோர்ட்டு ஏற்கனவே நிராகரித்து விட்டது.

இருப்பினும், தேர்தல் கமிஷனில் இன்று பிற்பகல் 3 மணிக்கு மீண்டும் இதுகுறித்து மனு அளிக்க எதிர்க்கட்சிகள் கூட்டாக முடிவு செய்துள்ளன. இத்தகவலை இந்திய கம்யூனிஸ்டு கட்சி செயலாளர் டி.ராஜா தெரிவித்தார்.

ஆந்திர முதல்மந்திரி சந்திரபாபு நாயுடு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் உள்ளிட்டோர் இந்த மனுவை அளிப்பார்கள் என்று தெரிகிறது. கூடுமானவரை அதிக ஒப்புகைச்சீட்டுகளை எண்ண வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்த உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com