எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை 2.30 மணிவரை ஒத்தி வைப்பு

நாடாளுமன்ற மேலவையில் எம்.பி.க்களின் அமளியால் அவை 2.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.
எதிர்க்கட்சிகள் அமளி: நாடாளுமன்ற மேலவை 2.30 மணிவரை ஒத்தி வைப்பு
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த 19ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகின்றது. வருகிற ஆகஸ்டு 13ந்தேதி வரை கூட்டத்தொடர் நடைபெறும். எனினும், இரு அவைகளிலும் கூட்டத்தொடர் தொடங்கிய நாள் முதல் பெகாசஸ் விவகாரம், எரிபொருள் விலை உயர்வு உள்ளிட்ட விசயங்களை எழுப்பி, அவையை நடத்த விடாமல் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற மேலவையில் இன்று வழக்கம்போல் கூட்டம் தொடங்கியதும் எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் அவையின் மைய பகுதிக்கு வந்து தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் அவை நடவடிக்கைகள் முடங்கின.

இதனால் அவை தலைவர் வெங்கையா நாயுடு மதியம் 12 மணிவரை கூட்ட நடவடிக்கைகளை ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.

இதன்பின் மீண்டும் அவை கூடியதும், தொலைபேசி ஒட்டு கேட்பு விவகாரம் (பெகாசஸ்) முதல் விவசாயிகள் போராட்டம் வரையிலான விவகாரங்களை எதிர்க்கட்சிகள் எழுப்பினர். தொடர்ந்து கூச்சலும், குழப்பமும் ஏற்பட்ட நிலையில் அவை 2.30 மணிவரை ஒத்தி வைக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com