பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை

3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.
பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகள் இன்று ஆலோசனை
Published on

புதுடெல்லி,

அரசியலமைப்பு சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படுகின்றன. இந்த நோக்கில் அரசியலமைப்பு சட்டம் 131-வது திருத்த மசோதா-2026, தொகுதிகள் மறுவரையறை மசோதா-2026 மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டங்கள் திருத்த மசோதா-2026 ஆகிய 3 மசோதாக்களை மத்திய அரசு முன் மொழிந்து உள்ளது.

இந்த மசோதாக்கள் நாளை (வியாழக்கிழமை) கூட உள்ள நாடாளுமன்ற சிறப்பு கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளன. இதையொட்டி நேற்று இந்த மசோதாக்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. மத்திய அரசின் இந்த நடவடிக்கையை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் கடுமையாக எதிர்த்து உள்ளனர்.

இந்த நிலையில், மகளிர் இடஒதுக்கீடு மசோதா, தொகுதி மறுசீரமைப்பு மீதான தங்களது நிலைப்பாடு குறித்து ஆலோசனை செய்ய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் டெல்லியில் இன்று எதிர்க்கட்சிகள் கூட்டம் நடைபெற உள்ளது. கார்கே இல்லத்தில் இன்று மாலை இக்கூட்டம் நடைபெறுகிறது. இதில் ராகுல் காந்தி உள்ளிட்ட கூட்டணி கட்சித் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com