தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு அளித்துள்ளனர். #ImpeachmentMotion
தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவை தகுதி நீக்கம் செய்யக்கோரி துணை ஜனாதிபதியிடம் எதிர்க்கட்சிகள் மனு
Published on

புதுடெல்லி,

தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கு எதிராக தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வர முனைப்பு காட்டி வரும் எதிர்க்கட்சிகள், தகுதி நீக்க தீர்மானத்திற்கு இறுதி வடிவம் கொடுக்கும் முயற்சியாக துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை சந்தித்தனர். தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு முதலில் ஆதரவாக இருந்த திரிணாமூல் காங்கிரஸ் மற்றும் திமுக கட்சிகள் தற்போது அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளதாகவும் பிடிஐ செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

அமித்ஷா மீது குற்றம் சாட்டப்பட்டு இருந்த சொராபூதின் என்கவுண்டர் வழக்கை விசாரித்த நீதிபதி லோயா மரணம் குறித்து சுதந்திரமான விசாரணை கோரிய மனுவை உச்ச நீதிமன்றம் நேற்று தள்ளுபடி செய்து இருந்த நிலையில், தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானம் விவகாரம் எழுந்துள்ளது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

தலைமை நீதிபதிக்கு எதிரான தகுதி நீக்க தீர்மானத்துக்கு மாநிலங்களவையில் 50 எம்.பிக்கள் ஆதரவும் மக்களவையில் 100 எம்.பிக்கள் ஆதரவும் தேவை என்பது கவனிக்கத்தக்கது. தகுதி நீக்க தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் கொண்டு வந்ததும், ராஜ்யசபா சேர்மன், தீர்மானத்திற்கு போதுமான பலம் உள்ளதா என்பதை ஆய்வு செய்வார். தீர்மானத்துக்கு போதிய உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால், இந்த பிரச்சினையை குறித்து ஆராய குழு ஒன்றை அமைப்பார். போதுமான ஆதரவு இல்லாவிட்டால், தீர்மானம் நிராரிக்கப்படும்.

மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவிடம் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் அளித்த மனுவில், 60 எம்.பிக்கள் கையெழுத்திட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com