மம்தா பானர்ஜி பேச்சுக்கு எதிர்ப்பு: மே.வங்க சட்டசபையில் அமளி

பாஜக ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி என்று மம்தா பானர்ஜி பேசினார்.
மம்தா பானர்ஜி பேச்சுக்கு எதிர்ப்பு: மே.வங்க சட்டசபையில் அமளி
Published on

கொல்கத்தா,  

வெளி மாநிலங்களில் குறிப்பாக, அசாம், ஒடிசா, மகாராஷ்டிரம், டெல்லி, குஜராத் போன்ற பாஜக ஆளும் மாநிலங்களில் வங்காள மொழி பேசும் மக்கள் துன்புறுத்தப்படுவதாகக் கூறி, மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் தொடாந்து போராட்டங்களை நடத்தி வருகிறது.

இந்த நிலையில், மேற்கு வங்க சட்டப்பேரவையில் இன்று இவ்விவகாரம் தொடாபான சிறப்பு தீமானம் ஆளும் கட்சி தரப்பில் முன்மொழியப்பட்டது.இந்த விவாதம் தொடங்கியவுடன் மேற்கு வங்க மந்திரியின் கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து அமளியில் ஈடுபட்ட எதிர்க்கட்சித் தலைவர் சுவேந்து அதிகாரி முழு கூட்டத்தொடரில் இருந்தும் நீக்கப்பட்டார்.

மம்தா பானர்ஜி பேசுகையில், பாஜக ஊழல்வாத கட்சி, வாக்குத் திருடர்களின் கட்சி. மிகப்பெரிய கொள்ளையர்களின் கட்சி. மத்தியில் மோடி மற்றும் அமித் ஷா தலைமையிலான அரசு விரைவில் கவிழும். எனத் தெரிவித்தார். மம்தாவின் பேச்சுக்கு எதிராக அமளியில் ஈடுபட்ட பாஜக கொறடா சங்கர் கோஷ், இன்று ஒருநாள் கூட்டத்தொடரில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டார். இதையடுத்து, சபையில் இருந்து அவர் வெளியேற மறுத்ததால், அவைக் காவலர்கள் மூலம் வெளியேற்ற உத்தரவிடப்பட்டது. இந்த நிலையில், அவைக் காவலர்கள் வெளியேற்றும்போது சங்கர் கோஷை தாக்கியதாகவும், அவர் பலத்த காயமடைந்ததாகவும் பாஜகவினர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com