

புதுச்சேரி
புதுச்சேரி மாநில 15வது சட்டசபையின் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆகஸ்டு 26-ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. கவர்னர் தமிழிசை உரையாற்றியதைத்தொடர்ந்து, முதல்-அமைச்சர் என். ரங்கசாமி பட்ஜெட் தாக்கல் செய்தார்.
இதனையடுத்து இன்று காலை சட்டசபை தலைவர் ஆர்.செல்வம் திருக்குறள் வாசித்து, பட்ஜெட் மீதான விவாதத்தை தொடங்கி வைத்தார்.
இந்த நிலையில் மேக்கேதாட்டுவில் கர்நாடக அணை கட்ட எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. முதல்வர் ரங்கசாமி முன்மொழிந்த தீர்மானம் ஒருமனதாக சட்டசபையில் நிறைவேற்றப்பட்டது.