வட கிழக்கு மாநிலங்களுக்கு ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை

வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

வட கிழக்கு மாநிலங்களுக்கு 3 நாட்களுக்கு மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்படுவதாக இந்திய வானிலை மையம் அறிவித்துள்ளது.

இதன்படி அசாம், அருணாச்சல பிரதேசம், மேற்கு வங்காளம், மணிப்பூர், மிசோரமில் மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் உத்தரகாண்ட், உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், ஜார்க்கண்ட், ஒடிசா, சண்டிகரில் மழை தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே கோவாவிற்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாநிலத்தில் கனமழை எச்சரிக்கையைக் கருத்தில் கொண்டு, கோவா முதல்-மந்திரி பிரமோத் சாவந்த், அங்குள்ள ஆரம்ப பள்ளிகள் முதல் 12-ம் வகுப்பு வரை அனைத்துப் பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவித்துள்ளார். 

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com