சீன ஆத்திரமூட்டலுக்கு எதிராக நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க பொறுமையையும்,தைரியத்தையும் காட்டினர் பாதுகாப்ப அமைச்சர் பாராட்டு

சீன ஆத்திரமூட்டலுக்கு எதிராக நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க பொறுமையையும்,தைரியத்தையும் காட்டினர் என பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பாராட்டினார்.
சீன ஆத்திரமூட்டலுக்கு எதிராக நமது வீரர்கள் குறிப்பிடத்தக்க பொறுமையையும்,தைரியத்தையும் காட்டினர் பாதுகாப்ப அமைச்சர் பாராட்டு
Published on

புதுடெல்லி

மாநிலங்களவியில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

சீன ஆத்திரமூட்டலுக்கு முகங்கொடுக்கும் போது அவர்கள் குறிப்பிடத்தக்க கட்டுப்பாட்டையும் தைரியத்தையும் காட்டியதாக பாதுகாப்பு மந்திரி ஆயுதப்படைகளைப் பாராட்டினார்.

நமது ஆயுதப்படைகளின் நடத்தை அவர்கள் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை எதிர்கொண்டு பொறுமையை பராமரித்த அதே வேளையில், இந்தியாவின் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கத் தேவைப்படும்போது அவர்கள் துணிச்சலையும் சமமாகக் காட்டினர் என்பதைக் காட்டுகிறது.

எல்லைபகுதியில் 5189 சதுர கிலோமீட்டர் பகுதியை பாகிஸ்தான் ஆக்கிரமித்து உள்ளது.லடாக்கில் 38 ஆயிரம் சதுர கிலோமீட்டர் பகுதியை சீன ராணுவம் ஆக்கிரமித்து உள்ளது.

சீனா, கடந்த பல தசாப்தங்களில், எல்லைப் பகுதிகளில் அதன் வரிசைப்படுத்தல் திறன்களை மேம்படுத்த குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு கட்டுமான நடவடிக்கைகளை மேற்கொண்டது. எல்லை உள்கட்டமைப்பு மேம்பாட்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை நமது அரசும் முந்தைய நிலைகளை விட இரு மடங்காக உயர்த்தியுள்ளது.

-கடந்த சில தசாப்தங்களாக இரு அணு ஆயுத அண்டை நாடுகளுக்கிடையில் கையெழுத்திடப்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களை சீனா மதிக்கவில்லை என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com