

ஐதராபாத்,
அடுத்த ஆண்டு நடைபெற உள்ள உத்தர பிரதேச சட்டமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம் என்று ஐதராபாத் எம்.பியும் ஏ.ஐ.எம்.ஐ.எம் கட்சியின் தலைவருமான ஓவைசி தெரிவித்துள்ளார். செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த ஓவைசி கூறுகையில், தேர்தலில் நாங்கள் போட்டியிட்டு வெற்றி பெறுவோம்.
உத்தர பிரதேச முஸ்லீம்கள் வெற்றி பெறுவார்கள். உத்தர பிரதேச தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதே எங்கள் நோக்கம். தேர்தல் கூட்டணி குறித்து ஆலோசனை நடத்த நாங்கள் தயார். ஆனால், அவர்கள் தான்( பிற கட்சியினர்) முதலில் பேச வேண்டும். கூட்டணிக்காக எந்தக் கட்சியையும் நாங்கள் முதலில் அணுக மாட்டோம் என்றார்.