நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் -மாநிலங்களவையில் மைத்ரேயன் உருக்கம்

நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார்.
நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் -மாநிலங்களவையில் மைத்ரேயன் உருக்கம்
Published on

புதுடெல்லி

அதிமுக உறுப்பினர்கள் மைத்ரேயன், லட்சுமணன், அர்ஜுனன், ரத்னவேல், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் டி.ராஜா ஆகியோரின் பதவிக்காலம் நிறைவடைந்ததால் உருக்கமாக பேசி விடைபெற்றனர்

ஓய்வு பெற இருக்கும் நிலையில் மாநிலங்களவையில் மைத்ரேயன் எம்.பி. உருக்கமாக பேசினார். அவர் பேசியதாவது:-

இந்த நேரத்தில், என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்திருந்ததற்காகவும், என்னை 3 முறை இந்த மன்றத்திற்கு அனுப்பியதற்காகவும் அன்பான தலைவரான அம்மா (ஜெயலலிதா)வுக்கு ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

ஏறத்தாழ 14 ஆண்டுகளாக நாடாளுமன்ற உறுப்பினராக பணிபுரிந்த எனக்கு தற்போது சூரியன் அஸ்தமிக்கும் நேரம். இலங்கை தமிழர்கள் படுகொலை குறித்து மாநிலங்களவை பரிசீலிக்கவோ, இரங்கல் தெரிவிக்கவோ இல்லை, நாளை எனக்கு ஏதேனும் நிகழ்ந்தால் கூட இந்த அவை எனக்கு இரங்கல் தீர்மானம் நிறைவேற்ற வேண்டாம் என கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com