

புதுச்சேரி,
பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இன்று இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-
இன்று 28.05.2026 (வியாழக்கிழமை) அன்று "பக்ரீத் பண்டிகையை" முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.