புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சேவை நாளை இயங்காது

அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும் என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் சேவை நாளை இயங்காது
Published on

புதுச்சேரி,

அம்பேத்கர் பிறந்தநாளான நாளை புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது என்று ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது. இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில்,

"நாளை 13.04.2026 (திங்கட்கிழமை) அன்று "அம்பேத்கர் பிறந்தநாளை" முன்னிட்டு ஜிப்மர் வெளிப்புற நோயாளிகள் பிரிவு இயங்காது. எனவே இந்த தேதியில் நோயாளிகள் வருவதை தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். எனினும், அவசரபிரிவு சேவைகள் அனைத்தும் வழக்கம் போல் இயங்கும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com