

புதுடெல்லி,
இந்தியாவில் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. அண்மையில் 100 கோடி தடுப்பூசிகளை செலுத்தி வரலாற்று சாதனை படைத்தது இந்தியா.
இந்த நிலையில் நேற்று இரவு 7 மணி நிலவரப்படி ஒரு நாளில் நாடு முழுவதும் 48,39,670 தடுப்பூசிகள் போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் இதுவரை செலுத்தப்பட்ட கொரோனா தடுப்பூசிகளின் எண்ணிக்கை 109.59 கோடியாக உயர்ந்துள்ளது.
மேலும் நாளின் இறுதி அறிக்கைகளின் தொகுப்புடன் தினசரி தடுப்பூசி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.