ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு

காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்மு காஷ்மீர்: ஸ்ரீநகரில் பயங்கரவாதிகள் கையெறி குண்டு வீச்சு
Published on

ஸ்ரீநகர்,

ஜம்மு காஷ்மீர் தலைநகரான ஸ்ரீநகரின் ஹரி சிங் ஹை என்ற தெருவில் அமைந்துள்ள மார்க்கெட் பகுதியில் கையெறி குண்டுகள் வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். மக்கள் நடமாட்டம் மிகுந்த இந்த இடத்தில் நடைபெற்ற இந்த தாக்குதலில் 12 பேர் காயம் அடைந்தனர்.

காயம் அடைந்தவர்கள் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். நிகழ்விடத்தை சுற்றி பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டுள்ளனர். காயம் அடைந்தவர்களில் ஒரு சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com