மாநிலங்களிடம் 1.91 கோடி தடுப்பூசிகள் இருப்பு- மத்திய சுகாதாரத்துறை தகவல்

நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
மாநிலங்களிடம் 1.91 கோடி தடுப்பூசிகள் இருப்பு- மத்திய சுகாதாரத்துறை தகவல்
Published on

புதுடெல்லி,

மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளிடம் தற்போது 1 கோடியே 91 லட்சத்து 55 ஆயிரத்து 630 தடுப்பூசிகள் இருப்பில் இருக்கின்றன என்று மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. மேலும், இதுவரை மாநிலங்களுக்கு 39.46 கோடி டோஸ் தடுப்பூசிகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் வீணானவை உள்பட மொத்தம் 37 கோடியே 55 லட்சத்து 38 ஆயிரத்து 390 டோஸ் தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன.

தற்போது மேலும் 12 லட்சம் தடுப்பூசிகள் வழங்கப்பட உள்ளன. நாடு முழுவதும் இதுவரை 38 கோடியே 14 லட்சத்து 67 ஆயிரத்து 646 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது. 24 மணி நேரத்தில் 17 லட்சத்து 40 ஆயிரத்து 325 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com