

புதுடெல்லி,
இந்தியாவில் ஜனவரி 16-ந் தேதி முதல் கொரோனா தடுப்பூசி திட்டம் நடைமுறையில் உள்ளது. நேற்று வரையில், நாட்டில் 20 கோடியே 25 லட்சத்து 29 ஆயிரத்து 884 டோஸ் தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும் 98 லட்சத்து 08 ஆயிரத்து 901 சுகாதார பணியாளர்கள் முதல் டோஸ் தடுப்பூசியும், 67 லட்சத்து 37 ஆயிரத்து 679 பேர் 2-வது டோஸ் தடுப்பூசியும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
முன்களப்பணியாளர்களில் 1 கோடியே 52 லட்சத்து 42 ஆயிரத்து 964 பேர் முதல் டோசும், 84,00,950 பெர் 2-வது டோசும் செலுத்திக்கொண்டுள்ளனர்.
18-44 வயது பிரிவினர் 1 கோடியே 38 லட்சத்து 62 ஆயிரத்து 428 பேர் முதல் டோஸ் தடுப்பூசி பெற்றுள்ளனர்.
45-60 வயது பிரிவினர் 6 கோடியே 26 லட்சத்து 09 ஆயிரத்து 143 பேர் முதல் டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர். 1 கோடியே 01 லட்சத்து 11 ஆயிரத்து 128 பேர் இரண்டாவது டோஸ் தடுப்பூசி செலுத்தி உள்ளனர்.
60 வயதுக்கு மேற்பட்டோரில் 5 கோடியே 73 லட்சத்து 45 ஆயிரத்து 128 பேர் முதல் டோசும், 1 கோடியே 84 லட்சத்து 11 ஆயிரத்து 563 பேர் இரண்டாவது டோசும் பெற்றுக்கொண்டுள்ளனர்.
இந்த தகவல்களை மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ளது.