இந்தியாவில் 37 ஆயிரம் ரெயில்வே பாலங்கள் 100 வருடங்கள் பழமையானவை; மத்திய மந்திரி தகவல்

இந்தியாவில் 37 ஆயிரம் ரெயில்வே பாலங்கள் 100 வருடங்கள் பழமையானவை என்று நாடாளுமன்றத்தில் இன்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் 37 ஆயிரம் ரெயில்வே பாலங்கள் 100 வருடங்கள் பழமையானவை; மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

நாடாளுமன்றத்தின் மக்களவையில் மத்திய ரெயில்வே இணை மந்திரி ராஜன் கோஹைன் இன்று அளித்துள்ள எழுத்துப்பூர்வ பதிலில், நாட்டில் 37 ஆயிரத்து 162 ரெயில்வே பாலங்கள் 100 வருடம் பழமையானவை. அவற்றில் 32 சதவீதம் அளவிற்கு வடக்கு மண்டலத்தில் அமைந்துள்ளன என தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர், பாலத்தின் வயதுக்கும் அதன் நிலைத்தன்மைக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை. இந்திய ரெயில்வேயின் பாலங்களை சோதனை செய்வதற்கு என தனியான முறை உள்ளது.

வருடத்திற்கு இரு முறை அனைத்து பாலங்களும் சோதனை செய்யப்படுவதுடன், அவற்றின் நிலையை அடிப்படையாக கொண்டு அடிக்கடியும் சோதனை செய்யப்படும் என கூறியுள்ளார்.

கடந்த 5 வருடங்களில் (2012-2013 முதல் 2016-2017 வரையில்) 3 ஆயிரத்து 675 பாலங்கள் சரி செய்யப்பட்டு பலப்படுத்தப்பட்டு உள்ளன என்று அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com