கோடாவை சேர்ந்த 39 ஆயிரம் மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி; டாப் 100-ல் 48 பேர்

ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்த 39 ஆயிரம் மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர், 48 பேர் டாப் 100-ல் இடம்பெற்று உள்ளனர்.
கோடாவை சேர்ந்த 39 ஆயிரம் மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி; டாப் 100-ல் 48 பேர்
Published on

கோடா,

நம் நாட்டில் சென்னை, மும்பை, ஐதராபாத், கான்பூர், கரக்பூர், டெல்லி உட்பட 22 இடங்களில் ஐஐடி எனப்படும் உயர் தொழில்நுட்பக் கல்லூரிகள் உள்ளன. ஐஐடியில் பிஇ, பிடெக் மாணவர் சேர்க்கைக்காக ஜெஇஇ என அழைக்கப்படும் கூட்டு நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது.

ஜெஇஇ நுழைவுத்தேர்வு, மெயின் தேர்வு, அட்வான்ஸ்டு தேர்வு என இரண்டு தேர்வுகளை உள்ளடக்கியது. முதல்கட்ட தேர்வான மெயின் தேர்வில் தேர்ச்சி பெறுவோர் அட்வான்ஸ்டு தேர்வுக்கு அனுமதிக்கப்படுவர். என்ஐடி, ஐஐஐடி உள்ளிட்ட உயர் கல்வி நிறுவனங்களில் சேர ஜெஇஇ மெயின் தேர்வே போதுமானது. ஆனால், ஐஐடியில் சேர விரும்பும் மாணவர்கள் அடுத்த கட்ட தேர்வான அட்வான்ஸ்டு தேர்வையும் எழுத வேண்டும். அட்வான்ஸ்டு தேர்வு மதிப்பெண் அடிப்படையில்தான் ஐஐடிக்கு மாணவர்கள் சேர்க்கப்படுகிறார்கள்.

இந்த ஆண்டு சேர்க்கைக்கான ஜெஇஇ மெயின் தேர்வு முடிவு வெளியானது. இதில் ராஜஸ்தான் மாநிலம் கோடாவை சேர்ந்த 39 ஆயிரம் மாணவர்கள் தேர்ச்சி பெற்று உள்ளனர், 4 பேர் டாப் 100-ல் இடம்பெற்று உள்ளனர் என கோடாவில் உள்ள பயிற்சி நிறுவனங்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. கடந்த வருடம் கோடாவில் இருந்து சுமார் 35 மாணவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்ச்சி பெற்றனர்.

கோடாவில் பயிற்சி கல்வி நிறுவனங்களில் பல கோடி அளவில் வர்த்தகம் நிகழ்கிறது.

கோடாவில் 40 பயிற்சி கல்வி நிறுவனங்களில் பல்வேறு உயர் படிப்புக்கான பயிற்சி வகுப்புக்கள் நடத்தப்படுகிறது, இதில் கலந்துக் கொள்ள நாடு முழுவதும் இருந்து சுமார் 1.50 லட்சம் மாணவர்கள் சேர்கிறார்கள், இந்தியாவில் பல்வேறு நுழைவுத்தேர்வுக்கான தலைமை பயிற்சி மையமாக கோடா திகழ்கிறது. போட்டித்தேர்வுகளில் இந்திய அளவில் முதலிடம் பெறுபவர்களையும் பயிற்சி கல்வி நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. ஆலன் கேரியர் இன்ஸ்டிடியூட் நிறுவனத்தின் இயக்குநர் பேசுகையில்,

ஜெஇஇ பயிற்சில் கோடா மீண்டும் அதனுடைய சிறப்பை காட்டி உள்ளது, அதிகமான மாணவர்கள் ஜெஇஇ அட்வான்ஸ் தேர்வுக்கு தேர்ச்சி பெற்று உள்ளார்கள், என கூறிஉள்ளார்.

ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் முதல் 100 இடங்களை பிடித்தவர்களில் 48 பேர் கோடா மாணவர்கள்.

கடந்த 2, 8 மற்றும் 9ம் தேதிகளில் நாடு முழுவதும் 1,781 மையங்களில் தேர்வு நடைபெற்றது. 2.21 லட்சம் மாணவர்கள் ஜெஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்று உள்ளனர். நாடு முழுவதும் உள்ள 18 ஐஐடிகளில் உள்ள 11 ஆயிரம் இடங்களுக்கு இந்த மாணவர்கள் அட்வான்ஸ் தேர்வை எழுத உள்ளனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com