

சிந்த்வாரா,
மத்திய பிரதேசத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த காட்மர் என்ற பாரம்பரிய திருவிழா வருடந்தோறும் நடைபெறுவது வழக்கம். ஜாம் ஆற்றின் இரு கரைகளிலும் சாவர்காவன் மற்றும் பந்துர்னா நகர மக்கள் குவிந்து இருப்பர். ஆற்றின் நடுவில் காய்ந்த மரத்தின் உச்சியில் கொடி ஒன்று ஏற்றப்பட்டிருக்கும்.
இரு புறமும் உள்ள மக்கள் கற்களை மறுபுறம் நோக்கி வீசி கொண்டே ஆற்றின் நடுவே சென்று கொடியை கைப்பற்ற வேண்டும். இந்த சம்பவத்தில் 400-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இரண்டு பேர் பலத்த காயத்துடன் சிகிச்சையில் உள்ளனர். கல் எறியும் திருவிழாவை முன்னிட்டு நூற்றுக்கணக்கான போலீசர் குவிக்கப்பட்டனர். மருத்துவ சிகிச்சைக் குழுவும் தயார் நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தது.