இந்தியாவில் குழந்தை இன்மையால் அதிகரித்து வரும் குழந்தைகள் தத்தெடுப்பு

இந்தியாவில் 2018-19ம் ஆண்டில் 4 ஆயிரம் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவில் குழந்தை இன்மையால் அதிகரித்து வரும் குழந்தைகள் தத்தெடுப்பு
Published on

புதுடெல்லி,

இந்தியாவில் குழந்தை இல்லாத தம்பதிகள் வேறொருவர் குழந்தையை முறைப்படி தத்தெடுத்து வருகின்றனர். டெல்லியில் உள்ள குழந்தை தத்தெடுப்பு வள அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, நாட்டில் குழந்தை இன்மை அதிகரித்து வருவது தெரிய வந்துள்ளது.

கடந்த 2018-19ம் ஆண்டில் 2 ஆயிரத்து 398 பெண் குழந்தைகள் உள்பட 4 ஆயிரத்து 27 குழந்தைகள் நாட்டில் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். இவர்களில் 3 ஆயிரத்து 374 குழந்தைகள் நாட்டின் உள்ளேயும், 653 குழந்தைகள் வேறு நாடுகளில் இருந்தும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இதேபோன்று 2017-18ம் ஆண்டில் 3 ஆயிரத்து 927 குழந்தைகளும், 2016-17ம் ஆண்டில் 3 ஆயிரத்து 788 குழந்தைகளும், 2015.16ம் ஆண்டில் 3 ஆயிரத்து 677 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். கடந்த 5 வருடங்களில் 2018-19ம் ஆண்டிலேயே அதிக எண்ணிக்கையில் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

இந்தியாவில் மகாராஷ்டிராவில் இதற்கான ஏஜென்சிகள் அதிக அளவில் உள்ளன. இதனால் 2018-19ம் ஆண்டில் இங்கிருந்து 477 பெண் குழந்தைகள் உள்பட 845 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர். இது இந்தியாவில் மிக அதிக எண்ணிக்கை ஆகும்.

இதுபற்றி மகளிர் மற்றும் குழந்தை வளர்ச்சி அமைச்சக அதிகாரி ஒருவர் கூறும்பொழுது, பெண் குழந்தை மீது மக்களுக்கு உள்ள எண்ணம் மாறி வருகிறது. இதனால் ஒவ்வொரு வருடமும் ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிக அளவில் தத்தெடுக்கப்படுகின்றனர் என கூறினார்.

மகாராஷ்டிராவை அடுத்து கர்நாடகாவில் 281 குழந்தைகளும், இதனை தொடர்ந்து ஒடிசாவில் 244 குழந்தைகளும் மற்றும் மத்திய பிரதேசத்தில் 239 குழந்தைகளும் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர்.

அரியானா போன்ற மாநிலங்களில் கூட ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் அதிகளவில் தத்தெடுக்கப்படுகின்றனர். அங்கு தத்தெடுக்கப்பட்ட 72 குழந்தைகளில் 45 குழந்தைகள் பெண் குழந்தைகள் ஆவர். டெல்லியில் 103 பெண் குழந்தைகள் உள்பட 153 குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளனர் என அந்த அறிக்கை தெரிவிக்கின்றது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com