நாட்டில் இதுவரை வழங்கிய கொரோனா தடுப்பூசி டோஸ்கள் 66.89 கோடி: மத்திய அரசு தகவல்

நாட்டில் இதுவரை மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு 66.89 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

கொரோனாவில் இருந்து ஒட்டுமொத்த நாட்டையும் பாதுகாக்கும் நோக்கில் தகுதி வாய்ந்த அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகளை மத்திய அரசு முடுக்கி விட்டு உள்ளது. இதற்காக உற்பத்தியாளர்களிடம் இருந்து நேரடியாக தடுப்பூசியை பெற்று மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு இலவசமாக வழங்கி வருகிறது.

அந்தவகையில் நேற்று வரை 66.89 கோடி டோஸ்களுக்கு மேல் வழங்கப்பட்டு இருப்பதாக மத்திய சுகாதார அமைச்சகம் கூறியுள்ளது. இதில் 4.37 கோடி டோஸ்கள் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கையிருப்பில் உள்ளதாகவும் அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

அதேநேரம் இன்னும் 1.56 கோடி டோசுக்கு மேல் விரைவில் வழங்கப்படும் எனவும் சுகாதார அமைச்சகம் குறிப்பிட்டு உள்ளது. அனைவருக்கும் இலவச தடுப்பூசி திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் தினந்தோறும் லட்சக்கணக்கானோர் தடுப்பூசி போட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com