

சென்னை,
மத்திய பணியாளர் தேர்வாணையம் நடத்தும் சிவில் சர்வீஸ் பணிகளுக்கான முதல்நிலைத் தேர்வு இன்று நடைபெற்று வருகிறது. இன்று காலை 9.30 மணி முதல் 11.30 மணி வரையிலும், மதியம் 2.30 மணி முதல் மாலை 4.30 மணி வரையிலுமாக 2 அமர்வுகளாக நாடு முழுவதும் தேர்வு நடைபெறுகிறது.நாடு முழுவதும் உள்ள தேர்வு மையங்களில் ஏறத்தாழ 933 காலிப் பணியிடங்களுக்கு சுமார் 8.19 லட்சம் தேர்வர்கள் விண்ணப்பித்து இருந்தனர்.
அந்த வகையில் சுமார் 8 லட்சம் பேர் இந்த தேர்வை எழுதுகிறார்கள். சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு வரலாற்றிலேயே முதன்முறையாக, தேர்வு முடிந்த பிறகு, தற்காலிக விடைக்குறிப்புகளையும் தேர்வாணையம் வெளியிடவுள்ளது.
முன்னர், இறுதி முடிவுகள் வெளியான பின்னரே விடைக்குறிப்பு வெளியிடப்பட்டு வந்ததால், தேர்வர்கள் பல மாதங்கள் காத்திருக்க வேண்டியிருந்தது. இந்த தேர்வில் தேர்ச்சி பெறுபவர்கள் மெயின் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள்.