ஜூன் வரையில் 87,000-க்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை துறந்துள்ளனர் - வெளியுறவுத்துறை மந்திரி தகவல்

கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

புதுடெல்லி,

இந்த ஆண்டில் கடந்த ஜூன் மாதம் வரையில் 87,026 இந்தியர்கள் குடியுரிமையை துறந்துள்ளதாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் மக்களவையில் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் அளித்த எழுத்துப்பூர்வ பதிலில் கடந்த 2011-ம் ஆண்டு முதல் இதுவரை 17.50 லட்சத்துக்கும் அதிகமானோர் இந்திய குடியுரிமையை கைவிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2020-ம் ஆண்டில் 85,256 பேரும், 2021-ம் ஆண்டில் 1,63,370 பேரும், 2022-ம் ஆண்டில் 2,25,620 பேரும் இந்திய குடியுரிமையை துறந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இது தொடர்பாக வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கர் கூறும்போது, "கடந்த இரண்டு தசாப்தங்களில் உலகளாவிய பணியிடத்தை நிரப்பும் இந்தியர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க வகையில் உள்ளது. அவர்களில் பலர் தங்களது தனிப்பட்ட வசதிக்காக வெளிநாட்டு குடியுரிமையை தேர்வு செய்துள்ளனர்.

வெற்றிகரமான, செழிப்பான மற்றும் செல்வாக்கு மிக்க புலம்பெயர்ந்தோர் இந்தியாவிற்கு சொத்தாகும். அவர்களது நற்பெயரை தேசத்தின் ஆதாயத்திற்காகப் பயன்படுத்துவதே எங்கள் அணுகுமுறை" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com