இதுவரை கங்கையை சுத்தப்படுத்த ரூ. 4800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது - சுற்றுச்சூழல் அமைச்சகம்

கடந்த 31 ஆண்டுகளில் கங்கையை சுத்தப்படுத்த ரூ.4800 கோடி செலவிடப்பட்டுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தேசிய பசுமைத் தீர்ப்பாயித்திடம் தெரிவித்துள்ளது.
இதுவரை கங்கையை சுத்தப்படுத்த ரூ. 4800 கோடி செலவு செய்யப்பட்டுள்ளது - சுற்றுச்சூழல் அமைச்சகம்
Published on

புதுடெல்லி

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கங்கை தூய்மை செயல்பாட்டு திட்டத்தை ஜனவரி 14, 1986 ஆம் ஆண்டில் துவங்கியதிலிருந்து ரூ.6788.78 கோடிகளை செலவிட்டுள்ளதாக அமைச்சகம் கூறியுள்ளது. இந்த ஆண்டு ஜூன் மாதம் வரை ரூ.4864.48 கோடிகள் செலவிடப்பட்டுள்ளன. மீதமுள்ள ரூ. 1924.30 கோடி இருப்பிலுள்ளது என்றும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.

சுமார் 2500 கி,மீ தூரம் பாயும் கங்கையை நான்கு பாகங்களாக பிரித்தது. தீர்ப்பாயம் 32 ஆண்டுகளுக்கு முன்பு தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் தீர்ப்பை வழங்கவுள்ளது. பிரபல சுற்றுச்சூழல் ஆர்வலர் எம் சி மேஹ்தாவால் 1985 ஆம் ஆண்டில் இவ்வழக்கைத் தொடுத்தார். தூய்மை செய்யப்படவுள்ள பாகங்கள், உத்தரகாண்ட், உ.பி, பிகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களின் வழியாக செல்கின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com