வெளிநாடு செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த 9 மாதம் காத்திருக்க தேவையில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல்

வெளிநாடு செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்த 9 மாதம் காத்திருக்க தேவையில்லை என்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி தெரிவித்துள்ளார்.
வெளிநாடு செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் செலுத்த 9 மாதம் காத்திருக்க தேவையில்லை - சுகாதாரத்துறை மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநலத் துறை மந்திரி மன்சுக் மாண்டவியா வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்கள், எந்த நாட்டுக்கு செல்கிறார்களோ அந்த நாட்டின் பயண வழிகாட்டு விதிமுறைகளின்படி உடனடியாக முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தி கொள்ளலாம். இந்த புது வசதி கோவின் இணையதளத்தில் விரைவில் கிடைக்கும்.

தற்போது இந்தியா முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு தனியார் தடுப்பூசி மையங்களில் பூஸ்டர் டோஸ் போடப்படுகிறது. எனினும், 2-வது டோஸ் போட்டுக் கொண்ட பெரியவர்கள், முன்னெச்சரிக்கையாக பூஸ்டர் டோஸ் போடுவதற்கு 9 மாத இடைவெளி இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், தற்போது வெளிநாடு செல்பவர்கள் 9 மாதம் காத்திருக்க தேவையில்லை.

மத்திய அரசு புள்ளிவிவரப்படி 18 வயது முதல் 59 வயது வரை உள்ள 12.21 லட்சம் பேருக்கு பூஸ்டர் டோஸ் போடப்பட்டுள்ளது தெரிய வந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com