வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் ஒவைசி எம்.பி. பெயர்காங்கிரஸ் புகார்

வாக்காளர் பட்டியலில் 2 இடங்களில் ஒவைசி எம்.பி. பெயர்காங்கிரஸ் புகார்
Published on

ஐதராபாத், 

தெலுங்கானா மாநில இறுதி வாக்காளர் பட்டியலில், அகில இந்திய மஜ்லிஸ் கட்சி தலைவரும், ஐதராபாத் எம்.பி.யுமான அசாதுதின் ஒவைசியின் பெயர் 2 சட்டசபை தொகுதிகளில் இருப்பதாக தெலுங்கானா காங்கிரஸ் மூத்த துணைத்தலைவர் நிரஞ்சன் கூறியுள்ளார்.

அவர் மேலும் கூறியதாவது:-

ராஜேந்திர நகர், கைரதாபாத் என 2 சட்டசபை தொகுதிகளில் ஒவைசி பெயர் உள்ளது. இது தேர்தல் கமிஷன் விதிகளுக்கு எதிரானது. இதுபற்றி ஐதராபாத் மாவட்ட தேர்தல் அதிகாரியிடம் புகார் தெரிவித்தோம்.

ஆனால், ஏதேனும் ஒரு தொகுதியில் இருந்து ஒவைசி பெயரை நீக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இது, எம்.பி.யின் பொறுப்பற்ற தன்மையையும், தேர்தல் கமிஷனின் அலட்சியத்தையும் காட்டுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

X

logo
Daily Thanthi
www.dailythanthi.com