ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து ஆக்சிஜன் இறக்குமதி
Published on

புதுடெல்லி

ஆக்சிஜன் தட்டுப்பாட்டைப் போக்க 5 நாடுகளில் இருந்து 5 ஆயிரத்து 805 மெட்ரிக் டன் திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மத்திய அரசுக்கு அறிக்கை அளித்துள்ள உள்துறை அமைச்சக கூடுதல் செயலர், ஐக்கிய அரபு அமீரகம், குவைத், பிரான்ஸ், சிங்கப்பூர், பஹ்ரைன் ஆகிய நாடுகளில் இருந்து திரவ மருத்துவ ஆக்சிஜன் இறக்குமதி செய்யப்படுவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பிஎம் கேர்ஸ் நிதியில் இருந்து ஒருலட்சம் ஆக்சிஜன் செறிவூட்டிகள் வாங்கப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

ஆக்சிஜன் விநியோகத்தை அதிகப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் தற்போது ஆயிரத்து 619 ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகள் இதற்கான பணியில் ஈடுபட்டிருப்பதாகவும் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com