

கான்பூர்,
உத்தர பிரதேசத்தின் கான்பூர் நகரில் தாதா நகர் தொழிற்சாலை பகுதியில் ஆக்சிஜன் ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், சிலிண்டரில் ஆக்சிஜன் நிரப்பும் பணிகள் நடந்து வருகின்றன.
இந்நிலையில், சிலிண்டரில் ஆக்சிஜனை நிரப்பும் பணியின்பொழுது திடீரென அதிகாலையில் வெடிவிபத்து ஏற்பட்டு உள்ளது. இதில் ஆலை தொழிலாளர் ஒருவர் உயிரிழந்து உள்ளார். 2 பேர் காயமடைந்தனர்.
அவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டு உள்ளனர். இதுபற்றி தகவல் அறிந்து போலீசார் சம்பவ பகுதிக்கு உடனடியாக சென்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.