'பிரிசம்' என பெயரை மாற்றிய ஓயோ நிறுவனம்: காரணம் இதுதான்


பிரிசம் என பெயரை மாற்றிய ஓயோ நிறுவனம்: காரணம் இதுதான்
x

நிறுவனத்தின் எதிர்கால நோக்கம், விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரிசம் என பெயரிடப்பட்டுள்ளது என்று ஓயோ நிறுவனம் கூறியுள்ளது.

இந்தியாவை தலைமையிடமாக கொண்டு உலகளாவிய விருந்தோம்பல் மற்றும் சுற்றுலா வசதி அளிப்புத்துறை நிறுவனமாக ஓயோ உள்ளது. கடந்த 2012ல் ரிதேஷ் அகர்வால் என்பவரால் துவங்கப்பட்ட ஓயோ நிறுவனம், 35க்கும் மேற்பட்ட நாடுகளில், ஆன்லைன் வாயிலாக ஹோட்டல் புக்கிங் சேவைகளை அளித்து வருகிறது.

பிரபல நிறுவனமான ஓயோ தனது தாய் நிறுவமான ஓரேவல் ஸ்டேஸ் லிமிடெட் என்ற பெயரை மாற்ற முடிவு செய்தது. இதற்காக தனது வாடிக்கையாளர்களிடம் கருத்து கேட்டது. சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் இதில் கலந்து கொண்டு பெயர்களை பரிந்துரைந்தனர்.

இந்தநிலையில் தனது தாய் நிறுவனத்தின் பெயரை ‘பிரிசம் லைப்’ என மாற்றி ஓயோ அறிவித்தது. எங்கள் அனைத்து வணிகங்களும் பிரிசம் என்ற ஒரே குடையின் கீழ் செயல்படும். நிறுவனத்தின் எதிர்கால நோக்கம், விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு, பிரிசம் என பெயரிடப்பட்டுள்ளது என்று ஓயோ நிறுவனம் கூறியுள்ளது. மக்களை எளிதாக சென்றடைய பல புதிய திட்டங்களை அறிவிக்க உள்ளதாகவும் ஓயோ தெரிவித்துள்ளது.

1 More update

Next Story