ப.சிதம்பரம் கைது சம்பவம்: காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதானத்தை தந்துள்ளது - பா.ஜனதா கிண்டல்

ப.சிதம்பரம் கைது சம்பவம், காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதானத்தை தந்துள்ளதாக பா.ஜனதா கிண்டல் செய்துள்ளது.
ப.சிதம்பரம் கைது சம்பவம்: காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதானத்தை தந்துள்ளது - பா.ஜனதா கிண்டல்
Published on

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ், பிரதமர் மோடியை வசைபாடிக்கொண்டே இருப்பது தவறு. அவர் செய்யும் நல்ல விஷயங்களை பாராட்ட வேண்டும் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு காங்கிரஸ் செய்தித்தொடர்பாளரும், ப.சிதம்பரத்துக்கு ஆதரவாக கோர்ட்டில் வாதாடியவருமான அபிஷேக் சிங்வி மற்றும் சசிதரூர் எம்.பி. ஆகியோர் ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இதற்காக காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா கிண்டல் செய்துள்ளது. இதுகுறித்து அக்கட்சியின் தகவல் தொழில்நுட்ப பிரிவு தலைவர் அமித் மாளவியா கூறியதாவது:-

சோனியா காந்தியின் சேவகர், சட்டத்தின் பிடியில் சிக்கிய சம்பவம், அவரது வக்கீல் உள்பட மற்ற காங்கிரஸ் தலைவர்களுக்கு நிதானத்தை அளித்துள்ளது. அவர்கள் பிரதமர் மோடியை திடீரென புகழத் தொடங்கி இருக்கிறார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com