

புதுடெல்லி,
ரூ 3,500 கோடி அளவிலான ஏர்செல் மேக்சிஸ் நிதி முறைகேடு வழக்கில் சிதம்பரம் மகன் கார்த்தி சிதம்பரத்திடம் அமலாக்க துறை இயக்குநரகம் முன்பே விசாரணை நடத்தி விட்டது. மேலும் வழக்கு குறித்து விசாரிக்க சிதம்பரத்திற்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது.
கடந்த ஜூன் 5-ந் தேதி முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் அமலாக்கத்துறை அதிகாரிகள் முன்பு ஆஜரானார். காலை அவரிடம் தொடங்கிய விசாரணை சுமார் 6.30 மணியளவில் முடிந்தது. விசாரணையின் போது, முறைகேடு குறித்து பல கேள்விகளை ப.சிதம்பரத்திடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் கேட்டதாக தெரிகிறது.
இந்நிலையில் நிதி முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் 2-வது முறையாக டெல்லி அமலாக்கத்துறை அலுவலகத்தில் இன்று ஆஜராகியுள்ளார்.