கொரோனா பரவல் கடவுளின் செயல் நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல்காந்தி,ப.சிதம்பரம், சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்

கொரோனா பரவல் கடவுளின் செயல் என்ற நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்தை ராகுல்காந்தி ,ப.சிதம்பரம் சுப்ரமணியன் சுவாமி விமர்சனம் செய்து உள்ளனர்.
கொரோனா பரவல் கடவுளின் செயல் நிதி அமைச்சர் கருத்துக்கு ராகுல்காந்தி,ப.சிதம்பரம், சுப்ரமணியன் சுவாமி விமர்சனம்
Published on

காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி நாட்டின் பொருளதார வளர்ச்சி மோசமாகி வருவது குறித்து மத்திய அரசு பொருளாதாரத்தை தவறாகக் கையாண்டுவருவது குறித்தும் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.

காங்கிரஸ்மூத்த தலைவர் ப.சிதமபரம் கூறும் போது

"தொற்றுநோய் ஒரு 'கடவுளின் செயல்' என்றால், தொற்றுநோயைத் தாக்கும் முன் இந்தியா? 2017-18, 2018-19 மற்றும் 2019-20 காலங்களில் பொருளாதாரத்தின் தவறான நிர்வாகத்தை எவ்வாறு விவரிப்பது.

"கடவுளின் தூதராக நிதி அமைச்சர் தயவுசெய்து பதிலளிப்பாரா?" என கேள்வி எழுப்பி உள்ளார்.

அதுபோல் பா.ஜனதா மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமியும் விமர்சித்து உள்ளார்.

இதுகுறித்து சுப்ரமணியன் சுவாமி வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்

கோவிட்-19 கடவுளின் செயல் என்று மத்திய நிதி அமைச்சர் குறிப்பிட்டதாக எனக்குக் கிடைத்த நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன. இது தொடர்பாக விரைவிலேயே வீடியோ வெளியிட உள்ளேன். ஜிடிபி சரிவானது 2015-ம் ஆண்டில் இருந்தே நிகழ்ந்துள்ளது.

2015-ல் ஜிடிபி 8 சதவீதமாக இருந்தது. 2020-ம் ஆண்டு முதல் காலாண்டில் இது 3.1 சதவீதமாக சரிந்துள்ளது. இதுகொரோனா பரவலுக்கு முந்தைய நிலவரமாகும். இதுவும் கடவுளின் செயலா?

மாநிலங்களுக்கு இழப்பீடு வழங்குவது தொடர்பாக 2 வாய்ப்புகள் மாநிலங்களுக்கு வழங்கப்படுவதாக மத்திய நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார். இதில் ரிசர்வ் வங்கியிடம் குறைந்த வட்டிக்கு ரூ.97,000 கோடியை கடனாக பெறலாம். இந்தத் தொகையை 5 ஆண்டுகளுக்குப் பிறகு வரி வசூல் அதிகரிக்கும் போது திரும்ப செலுத்தலாம். அல்லது மாநில அரசுகளே இந்த ஆண்டு ஏற்படும் ஜிஎஸ்டி பற்றாக்குறையான ரூ.2.35 லட்சம் கோடியை ஏற்றுக் கொள்வது என்பதாகும். இதை மாநில அரசுகள் ரிசர்வ் வங்கியுடன் கலந்து பேசி முடிவெடுக்கலாம். இவ்வாறு சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com