இந்தியா வந்தடைந்தார் பி.வி.சிந்து

இன்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தடைந்ததாக பி.வி.சிந்து தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்தடைந்தார் பி.வி.சிந்து
Published on

பெங்களூரு,

இந்திய பேட்மிண்டன் வீராங்கனை பி.வி. சிந்து மத்திய கிழக்கில் நிலவும் போர் பதற்றத்தால் துபாயில் சிக்கித் தவித்த நிலையில், தற்போது பாதுகாப்பாக இந்தியா திரும்பியுள்ளார்.

இன்று பெங்களூருவில் உள்ள தனது இல்லத்திற்கு வந்தடைந்ததாக தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்கள் மிகவும் கடினமானதாக இருந்தாலும், மீண்டும் வீட்டிற்கு வந்ததில் மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்

மேலும், அக்கறையுடனும் பொறுப்புடனும் கவனித்துகொண்ட துபாய் அதிகாரிகள், விமான நிலைய ஊழியர்கள் மற்றும் இந்தியத் தூதரகக் குழுவினருக்கு அவர் தனது நன்றியைத் தெரிவித்துள்ளார்.

Also Read
தொடர் தாக்குதல்களால் அசாதாரண சூழல் நிலவுகிறது - பி.வி.சிந்து
இந்தியா வந்தடைந்தார் பி.வி.சிந்து

இங்கிலாந்தில் நடைபெறவிருந்த 'ஆல் இங்கிலாண்ட் சாம்பியன்ஷிப்' (All England Championships) போட்டியில் பங்கேற்கச் சென்றபோது, ஈரான் - இஸ்ரேல் இடையேயான போர் சூழலால் விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால் அவர் துபாயில் சிக்கிக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com